Thursday, March 19, 2015

கலப்பட அபாயங்கள் 2 (தேங்காய் எண்ணெய் , சமையல் எண்ணெய்)

கலப்பட அபாயங்கள் 1

தேங்காய் எண்ணெய் , சமையல் எண்ணெய் 
அடுத்து நாம் காணப் போவது காலையில் நாம் தினமும், தலைக்கு, (சிலர் கால், கைகளுக்கும் கூட) தேய்த்துக் கொள்ளும் தேங்காய் எண்ணெய்  பற்றி அதிர்ச்சி தரும் உண்மைகள்.  

தற்போது பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சில கம்பெனி தேங்காய் எண்ணெய், தேங்காயில் இருந்து தயாரிக்கப்பட்டதில்லை.

தேங்காய் எண்ணெய் என்றாலே அதற்கு முழுமை யான மூலப்பொருள் தேங்காய்தான். பருத்த தேங்காய் களை உடைத்து, காயவிட்டு செக்கில் ஆட்டி எடுத்து எண்ணெய் பெறப்படுகிறது. தலை முடிக்கு தேய்ப்பது மட்டுமல் லாது, சித்தா உள்ளிட்ட பலதரப்பட்ட மருந்துகள் தயாரிப்பிலும், உணவிலும் தேங்காய் எண்ணெய் அதிகம் பயனாகிறது. 

ஆனால் சமீப காலமாக பெரும்பாலான கடைகளில் விற்கும் தேங்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெயே இல்லை. 

 சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு  பதில் வேறு என்ன இருக்க முடியும் ?
தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .

பின் எப்போது தான் கூடுகிறது ?

கச்சா எண்ணெய்  விலை கூடும் போது தான் விலை கூடுகிறது ..
கச்சாஎண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?
பல கம்பெனிகள் தேங்காய் எண்ணெயை மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய  கழிவுடன் தேங்காய் எண்ணெய்  எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய்  என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்கிறார்கள்.


அவர்கள் பொய் சொல்வதில்லை. உண்மையை அவர்களின் தயாரிப்புக்களின் மேல் அட்டையிலேயே (லேபிள்) அச்சடித்தும் இருக்கிறார்கள். நாம்தான் பார்த்துப் படித்து புரிந்து கொள்வதில்லை.

மினரல் ஆயில் என்றால் என்ன ?..

பொதுவாக கச்சா எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு துவங்கி ரோட்டுக்கான தார் வரை 24 வகைப் பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதில் பெட்ரோலியப்  பொருட்களின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய்  என்னும் லிக்யுட்  பேரபின்  ஆகும் ‘அமெரிக்க மண்ணெண்ணெய்’ இதை இப்படியும் சொல்வார்கள்”சீமை எண்ணெய் – சீமெண்ணெய்” .
இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் .

இந்த மினரல் ஆயில் பற்றி விக்கிபீடியாவின் விளக்கம்:
 A mineral oil is any of various colorless, odorless, light mixtures of higher alkanes from a non-vegetable (mineral) source, particularly a distillate of petroleum
Mineral oil is a clear, colorless, odorless, petroleum derivative. It's chemically similar to petroleum jelly and is produced in heavy and light grades, or viscosities. There are three further classifications — paraffinic, aromatic, and naphthenic — based on what type of alkanes the oil is made from, and they have slightly different chemical makeups and properties. Inexpensive and easy to make, it's used in many different products, including cooling systems, lubricants, cosmetics, and medicine.

நிறம், மணமற்ற, அடர்த்திமிக்க இந்த மினரல் ஆயிலுடன் தேங்காய் வாசத்திற்கான எசன்ஸ் கலந்து தயாரித்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் விற்பனைக்கு வருகிறது. இந்த மினரல் ஆயிலுடன் எந்த எண்ணெயையும் கலப்படம் செய்தும் விற்க முடிவதால் சிலர் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யுடன், மினரல் ஆயிலை பெருமளவில் கலந்து விற்பதும் நடக்கிறது. 

இந்த எண்ணெயை தலைக்குத் தேய்ப்பது உள்ளிட்ட வெளிப்பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது ஒருபுறமிருக்க, நம் தென்மாவட்டத்தின் பலரது வீடுகளில் உணவு தயாரிப்பில் அதிகளவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் சாதம், முறுக்கு, பலகாரங்களுடன் தாளிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.

பாக்கெட்டில் அடைத்து விற்கும் இந்த மினரல் ஆயிலை அறியாமையில் பலரும் சமையலுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். தேங்காய் எண்ணெய்யில் மட்டுமல்லாது நாம் பயன்படுத்தும் பலதரப்பட்ட ஹேர் ஆயில்கள், சோப்புகள், முக லோஷன்களிலும் ‘மினரல் ஆயில்’ அரக்கன் இருக்கிறான்.

மினரல் ஆயிலில் உருவாகும் தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் தோல் வறண்டு போகும். தலைமுடி தன் ஜீவனை இழக்கும். பலருக்கும் ஒவ்வாமையில் முடி கொட்டும். சீக்கிரமே நரைத்துப் போகும். அரிப்பு வரும், குழந்தைகளுக்கு பயன்படுத்துவது மேலும் ஆபத்தானது. இந்த மினரல் தேங்காய் எண்ணெய்யை உணவுக்குப் பயன்படுத்துவது இன்னும் கொடுமையானது என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். 

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான் 

தேங்காய் எண்ணெய்  என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய்  இவைகள் ..  சாம்பிளுக்கு சில 
    Inline image 3
 Inline image 4
               
     
நாம்  முன்பெல்லாம்  பனிக்காலங்களில் நம் வீட்டில் வைத்திருக்கும் தேங்காய் எண்ணெய்  உறைந்து போய் விடும். ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் எண்ணெய் உறைவதில்லை. இதை யோசித்திருக்கிறோமா? ஆனால் அதே சமயம் பெரும்பாலான எல்லாக் கம்பெனி எண்ணெய் பாட்டில்களின் மேலே லேபிளில் ஒரு முக்கியமான விஷயம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அது இதுதான். 

“STORE IN A COOL & DRY PLACE PROTECTED FROM SUN LIGHT”

புரிந்து கொள்ளுங்கள். தே. எண்ணெயாக இருந்தால் குளிர் காலத்தில் உறைந்து போகும். வெயிலில் வைத்து உபயோகிப்போம். ஏனெனில் அது உண்மையான       தே. எண்ணேய். ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் எண்ணெயை குளிர்ந்த, வறட்சியான இடத்தில் வைக்க சொல்கிறான். கூடவே வெயில் படாமல் வைக்கவும் சொல்கிறான். ஏனெனில் வெயில் பட்டால் மண்ணெண்ணெய் ஆவியாக ஆரம்பித்து விடும். என்ன ஜாக்கிரதை பாருங்கள்.

இதை விட இன்னொரு அதிர்ச்சி தரும் எச்சரிக்கை. 

Warning : For External use only .
Keep out of reach of children to avoid
accidental drinking; and inhalation
which can cause serious injury.
Discontinues use if skin irritation occurs

இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

எச்சரிக்கை: வெளி உபயோகத்திற்கு மட்டும்
குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
தற்செயலாக குடிப்பதையோ, நுகர்வதையோ தவிர்க்கவும்,
ஏனெனில் அவை மோசமான தீங்கை உண்டாக்கும்.
தோலில் எரிச்சல் ஏற்பட்டால் உபயோகிப்பதை நிறுத்தவும்.

இரண்டு எலும்பும், ஒரு மண்டை ஓடும் போட்டு அபாயம்னு சொல்லலை. அவ்வளவுதான். இது நான் சொல்லவில்லை குழந்தைகளுக்கென்றே பிர்த்யேகமாக பொருட்களை தயாரித்து விற்கும் புகழ்பெற்ற ஜான்ஸன்ஸ் & ஜான்ஸன்ஸ் கம்பெனி அதன் ஹேர் ஆயில் லேபிளில் சொல்கிறது.

குழந்தைகளுக்கு உபயோகிக்கும் ஆயிலையே குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க சொல்கிறது. எண்ணை வாய்க்குள் போகவும், சுவாசிக்கும் போது மூச்சுக் காற்றோடு உள்ளே போகவும் வாய்ப்பிருக்கும்போது அது மோசமான தீங்கை உண்டாக்கும் என்கிறது. எரிச்சல் வந்தால் நிறுத்து என்கிறது. நம்ம பாப்பா எரிச்சல்னு சொல்லி பேசத் தெரியுமா? யோசியுங்கள் நண்பர்களே.

தேங்காய் எண்ணெய்  வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய்  ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள். டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய் யை  வாங்காதீர்கள். நல்ல தேங்காய் எண்ணெய்  முடியை நன்கு வளர வைக்கும். கலப்படமில்லா தேங்காய்  எண்ணெய்  முடி வளர ,கருக்க உதவும்.

இனி அடுத்து நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் சமையல் எண்ணெய்களான கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், பாம் ஆயில் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்.

முன்னர் கூறிய தேங்காய் எண்ணெய் எப்படி தயாரிக்கிறார்களோ அது போலவே சமையல் எண்ணெய்களும்,  லிக்யுட் பாரஃபின் என்ற பெட்ரோலியத்தின் ‘பை ப்ரோடக்ட்’  என்னும் கழிவுப் பொருளுடன்  தேவையான வாசத்திற்கான ‘ஃப்ளேவர்’ கலந்து தயாரித்து சமையல் எண்ணெய் என்ற பெயரில் விற்பனைக்கு வருகிறது.
மூலப்பொருளை விட பல மடங்கு விலை குறைவான லிக்யூட் பாரஃபினைக் கலப்பதால் எண்ணெயின் அடக்க விலை பெருமளவில் குறைந்து விடுகிறது. வியாபார போட்டிக்காக குறைந்த விலையில் கலப்பட எண்ணெயை விற்பவர்களுக்கு மனிதர்களின் ஆரோக்கியம் பற்றிய அக்கறை இருப்பதில்லை.

அதற்காக மேலே சொன்ன எண்ணெய்களை கலப்படத்தை அஞ்சி தவிர்த்து விட்டு ரீஃபைண்டு ஆயிலை உபயோகப்படுத்தலாமா என்றால் அதில் இன்னும் அதிக ஆபத்து இருக்கிறது.

சாதரணமாக ஒரு பொருளில் இருந்து எண்ணெய் எடுப்பதற்கு அந்தப் பொருளை காய வைத்து, அரைத்து எண்ணெய் எடுப்பார்கள். ஆனால் ரீஃபைண்டு ஆயிலைப் பொறுத்தவரையில், முதலில் எண்ணெய் வித்துக்களைப் பிரித்து, நசுக்கி, நீராவி முறையில் ( டிஸ்டிலேஷன்) 110 முதல் 180 டிகிரி வரை வெப்பத்தை உயர்த்தி எண்ணெயை பிரித்தெடுக்கிறார்கள்.

சக்கையான வித்துக்களில் இன்னமும் மிச்சமிருக்கிற எண்ணெயைப் பிழிந்தெடுக்க பெட்ரோலிய உற்பத்தியின் போது கிடைக்கும்  ஹெக்ஸேன் என்னும் திரவத்துள் சக்கையை ஊற வைத்து பின்னர் , வெப்பப்படுத்தி  நீராவி முறையில் (டிஸ்டிலேஷன்) வெவ்வேறு கொதி நிலையில்  தனித்தனியே கிடைக்கும் எண்ணெயையும், ஹெக்ஸேனையும் பிரித்து எடுத்துக் கொள்கிறார்கள்.

இப்படிப் பிரித்துடுக்கப்பட்ட எண்ணெயை இன்னும்  சுத்தமாக்க பாஸ்பேட் எண்ணும் கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது.

இதுவரை நடந்ததெல்லாம் பிரித்தெடுப்பு மட்டுமே. அடுத்து நடப்பதுதான்   ரீஃபைனிங், டிகம்மிங், நியூட்ரிலைசேசன்  போன்ற பிராஸஸ்கள் அடுத்தடுத்து செய்யப்படும். இறுதியில் காஸ்டிக் சோடா  அல்லது சோடா ஆஷ் மூலம் ப்ளீச்சிங் செய்யப்பட்டு பிசுபிசுப்பில்லாத, நிறமற்ற , மணமற்ற திரவமாக எண்ணெய் கிடைக்கிறது. இதில் தேவைப்படும் நிறம் மற்றும் மணம் வேண்டி அதற்கான கெமிக்கல் வண்ணமூட்டிகளையும், ஃப்ளேவர் என்னும் மணமூட்டிகளையும் சேர்த்து பாட்டிலில், டின்னில், பாக்கெட்டுக்களில் அடைத்து கம்பெனி லேபிளோடு விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.

இதில் அபாயகாரமானவைகள் நிறைய இருக்கின்றன. ஹெக்ஸேன் என்னும் கெமிக்கல் உடலில் தசைகள் மற்றும் எலும்புகளை கடும் பாதிப்புக்களுக்கு உட்படுத்தும், மேலும் இது ஒரு புற்று நோய்க் காரணி என்றும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள் என்பதற்காகவே தெருவோரக் கடைகளில் வடை, போண்டா, சில்லி சிக்கன் வாங்கி சாப்பிடக்கூடாது என நமக்கு சொல்லப்படுகிறது. ஒரு முறை வெப்பப்படுத்திய எண்ணெயை மறுமுறை சூடு படுத்துவது நல்லதில்லை என்றால், ரீபைண்டு ஆயில் தயாரிக்கும்போது உச்சபட்சமாக கிட்டத்தட்ட 500 டிகிரி வரை வெப்பபடுத்தப்பட்டு பின்னர் குளிர்விக்கப்பட்டு தயாரிக்கப்படுவது பற்றி என்ன சொல்வது? இப்படி ஏற்கன்வே கொதிக்க வைக்கப்பட்ட எண்ணெயைத்தான் நாம் வாங்கி உபயோகப்படுத்துகிறோம். இயற்கையான சத்துக்கள் எல்லாம் இப்படித் தயாராகும் எண்ணெயில் அழிந்து விடுவதால் செயற்கையான சத்துக்கள் இந்த எண்ணெயில் இறுதியில் கலக்கப்படுகிறது.

 ஆகவே இந்தக் கலப்படங்களைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால், நீங்களே நேரில் சென்று எள்ளையோ, கடலையையோ, தேங்காயையோ  வாங்கி, காய வைத்து, உங்கள் ஊரிலேயே அருகில் இருக்கும் செக்கு என்னும் எண்ணெய் அரவை ஆலைக்கு கொண்டு சென்று உங்கள் கண் முன்னேயே ஆட்டி கொண்டு வந்து உபயோகியுங்கள். அல்லது விலை சற்றுக் கூடுதலாக இருந்தாலும் கூட உங்களுக்கு தெரிந்த நம்பகமானவர்கள் மூலம் எண்ணெயை வாங்கிக் கொள்ளுங்கள்.

இன்னும் அடுத்தடுத்து கலப்படங்களை விளக்குகிறேன் .

4 comments:

  1. Unearth more frauds and create awareness among general public. Pranesh

    ReplyDelete
  2. Keep it up my dear friend!!! Good job...

    ReplyDelete
  3. நல்ல பதிவு. தொடரட்டும் பணி
    http:\\comenxpress.blogspot.com

    ReplyDelete
  4. Very very good and useful information

    ReplyDelete