Thursday, March 19, 2015

கலப்பட அபாயங்கள் 1 (டூத் பேஸ்டின் மர்மங்கள்)

கலப்பட அபாயங்கள் 1

டூத் பேஸ்டின் மர்மங்கள்:

பெரும்பாலானோர் காலையில் எழுந்ததும் முதலில் செய்யும் காரியம் டூத்பேஸ்டு கொண்டு பல் துலக்குவதுதான்.. முன்பெல்லாம் நமது முன்னோர்கள் ஆலங்குச்சியையும், வேப்பங்குச்சியையும் பல்துலக்க பயன்படுத்தினர். உமிக்கரி, உப்பு, இடித்த மிளகு சேர்த்து பல் தேய்த்த காலமும் உண்டு.

ஆனால், இன்று அதிகாலையின் சுறுசுறுப்பை நம்மில் முதலில் விதைப்பது நறுமணம் கவழும் டூஸ் பேஸ்டுகளாகும்.. சுகந்தமான சுவாசத்திற்கும், வலுவான பற்களுக்கும் நம்மில் பெரும்பாலானோர் டூத் பேஸ்டுகளையே நம்பியுள்ளனர். ப்ரஸ் மற்றும் டூத் பேஸ்டுகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் இன்றைய காலக்கட்டத்தில் செலவிடப்படுகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சார்ந்த ஏராளமான டூஸ் பேஸ்டுகளும், ப்ரஸ்ஸுகளும் நமது சந்தையை ஆக்கிரமித்துள்ளன.

மினி ஸ்க்ரீனில் தொடர்ந்து காட்டப்படும் டூத் ப்ரஸ், பேஸ்ட் விளம்பரங்கள் நம்மை வலுக்கட்டாயமாக வாங்கத் தூண்டுகின்றன. பற்கள் மற்றும் ஈறுகள் பலம் பெற என ஒரு விளம்பரம், சுகந்தமான சுவாசத்திற்க்கு இன்னொரு விளம்பரம், பற்கள் பளீரிட மற்றொரு விளம்பரம் என விளம்பரங்கள் அளிக்கும் வாக்குறுதிகளால் அடிக்கடி நாம் ப்ராண்டுகளையும் மாற்றி வருகிறோம்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலவே தான் டூத் பேஸ்டும். நீங்கள் விளம்பரங்களில் காண்பதுபோல ப்ரஸ் முழுக்க பேஸ்டை நிரப்பிவிட்டா பல் துலக்குகின்றீர்கள்? அவ்வாறெனில் நீங்கள் உங்கள் பற்களுக்கு தீங்கிழைக்கின்றீர்கள் என்பதுதான் உண்மை. காரணம் ஃப்ளோரைடும், இதர இரசாயனப் பொருட்களும் கலந்த டூத் பேஸ்டை ப்ரஸ்ஸில் ஒரு பட்டாணி அளவுக்கு எடுத்தாலே போதுமானது. இவ்விடத்தில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில் டூத் பேஸ்டின் அளவில் அல்ல, மாறாக எவ்வாறு பேஸ்டை உபயோகின்றீர்கள் என்பதாகும்.

விளம்பரங்கள் உங்களை வழி தவறச் செய்துவிடும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் நல்லது.

ப்ளோரைடு கலந்த பற்பசைகளை பயன்படுத்துமாறு பல் மருத்துவக் கழகங்களும், பல் மருத்துவர்களும் பொதுவாக அறிவுறுத்துகிறார்கள்.

ப்ளோரைடு இயற்கையாகவே கிடைக்கின்ற ஒன்று. அது நமது பற்களும் எலும்புகளும் வலிமையாக இருக்க உதவுகிறது. பல சோதனைகளில், ப்ளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பவர்களுக்கு பற்குழி விழுவது குறைகிறது அல்லது தவிர்க்கப்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் அளவுக்கு அதிகமான ப்ளோரைடு உபயோகம் பற்களுக்கு ஊறு விளைவிக்கும். அது மட்டுமல்லாமல் உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.
1997-ம் ஆண்டின் மத்தியிலிருந்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) ப்ளோரைடு கலந்த பற்பசைகளில் கீழ்க்கண்ட எச்சரிக்கையை அச்சிட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.

“WARNINGS: Keep out of reach of children under 6 years of age. If you accidentally swallow more than used for brushing, seek PROFESSIONAL HELP or contact a POISON CONTROL center immediately.”

 “ஒரு முறை பல் துலக்குவதற்கு வேண்டிய அளவை விட அதிகமான பற்பசையை உட்கொண்டாலே உடனடியாக மருத்துவ உதவியை நாடவும் அல்லது, விஷமுறிவு மையத்தை நாடவும்”

என்ற எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
ப்ளோரைடு கலவையை நேரடியாக உட்கொண்டால் விஷம் தான். ஆனால் பற்களிலும், எலும்புகளிலும் ப்ளோரைடு கலந்திருக்கிறது. இது பற்களை வலுவானதாக ஆக்குகிறது.

பூமியில் இயற்கையாக கிடைப்பது கால்சியம் ப்ளோரைடு என்ற தாது உப்பு வடிவில் உள்ளது. ஆனால் பற்பசையில் கலக்கப்படும் ப்ளோரைடு இந்த வகையில் இல்லை. சோடியம் ப்ளோரைடு அல்லது ப்ளூரோசாலிசிக் அமிலம் பற்பசையில் உபயோகிக்கப்படுகிறது. இவை அலுமினியத் தொழிற்சாலைகளில் விஷக் கழிவுகளாக வெளியேறுபவை. இவை எலி பாஷாணத்திலும், பூச்சி மருந்திலும் உபயோகப் படுத்தப்படுகிறது. இவைகளையே ப்ளோரைடு தேவைக்காக பற்பசையில் சேர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ப்ளோரைடு நல்லதா கெட்டதா என்பது குறித்து வல்லுநர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
                    
 Inline image 1
Directions
Adults and children 2 years of age and older:
brush teeth thoroughly, preferably after each meal or at least twice a day,
or as directed by a dentist or physician
Children 2 to 6 years:
Use only a pea sized amount and supervise child’s brushing and
rinsing (to minimize swallowing)
Children under 2 years: ask a dentist or physician

 
 
 இதன் தமிழ் மொழிபெயர்ப்பு:


உபயோகிக்கும் முறை:
பெரியவர்கள் மற்றும் 2 வயதுக்கு மேலானவர்கள்:
ஒவ்வொரு முறையும் உணவு உண்ட பின்னால் அல்லது தினமும் இருமுறை
அல்லது மருத்துவர் / பல் மருத்துவர் சொல்படி பற்களை நன்றாக ப்ரஷ் செய்யவும்
2 – 6 வயது குழந்தைகள்:
பட்டாணி அளவு மட்டும் உபயோகிக்க வேண்டும்.
பல் துலக்கும் போதும், கொப்பளிக்கும் போதும் அவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். (விழுங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும்)
2 வயதுக்கும் குறைந்த குழந்தைகள்: மருத்துவர் / பல் மருத்துரிடம் கேட்கவும்.

 இது மட்டுமல்ல இன்னொரு எச்சரிக்கையயும் நமக்காக நம் நலனுக்காக விடுக்கிறார்கள்.
அது இதோ:
Warnings: Keep out of reach children under 6 years of age
If more than used for brushing is accidentally swallowed, get medical help or contact a Poison Control Center right away

  இதன் மொழிபெயர்ப்பு:
எச்சரிக்கை : 6 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைத்துக் கொள்ளவும்.
அதிகப்படியாக உபயோகித்து, தவறுதலாக விழுங்கி விட்டால், உடனே மருத்துவ உதவி பெறவும் அல்லது சரியான முறையில் விஷக் கட்டுப்பாட்டு நிலையத்தை அனுகவும்.
 இந்த ‘உபயோகிக்கும் முறை மற்றும் எச்சரிக்கை’ இந்த ஒரு பேஸ்ட்டில் மட்டும் சொல்லப்படவில்லை. நீங்கள் வாங்கும் எல்லா பேஸ்ட்டின் அட்டையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எழுத்துக்கள்தான் மிக மிகச் சிறியதாக இருக்கும். பிரசுரமாகியும் இருக்கணும். ஆனால் படிக்கக்கூடாது. இது வடிவேலுவின் ‘வரும் ஆனால் வராது’ மாதிரி  ‘இருக்கும் ஆனால் இருக்காது’. (படிக்க முடியாது). சாம்பிளுக்கு கீழே உள்ள படங்களைப் பார்க்கவும்.

Inline image 2
இப்படிப்பட்ட பேஸ்ட்டுகளைத் தவிர்ப்பீர், பற்களையும் உடல் நலத்தையும் பாதுகாப்பீர்.
எளிதான முறையில் வீட்டில் கல் உப்பு, கடுக்காய் பொடி, லவங்கம், கற்பூரம், புதினா, எலுமிச்சை முதலானவற்றைக் கொண்டு நாமே பல்பொடி தயார் செய்து துலக்கலாம்.
இது ஆபத்தில்லாதது. சிக்கனமானது. உடலுக்கும், பற்களுக்கும் உறுதுணையானது.

இந்த ஆரோக்கியத்தைக் கெடுத்து அனைவரையும் நோயாளிகளாய் மாற வைத்து அவர்களுக்கு மருத்துவம் என்ற பெயரில் மருந்தையும் , மாத்திரைகளையும் இன்னும் பிற செலவுகளையும் திணித்து தங்களின் பாக்கெட்டுக்களை நிரப்பிக் கொள்கின்றன பன்னாட்டுக் கம்பெனிகள். அந்த கம்பெனிகளின் முதலாளிகள் இந்தியர்கள் இல்லை. இந்தியாவில் தயாரிப்பதாலும், இந்தியாவில் ஆபிஸ் இருப்பதாலும் இவைகள் இந்தியக் கம்பெனிகள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அனைத்தும் வெளினாட்டு கம்பெனிகள். அவர்கள் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றார்கள். இந்த நாட்டின் அரசியலையும் தீர்மானிக்கின்றார்கள்.

புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து நாம் அன்றாடம் உபயோகிக்கும் சமையல் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தயாரிப்பிலும், விற்பனையிலும் எப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அடுத்த போஸ்ட்டில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment