Friday, January 2, 2015

மருத்துவ உலகம் கார்பரேட் கம்பெனிகளின் கையில்



மருத்துவ உலகம் முழுக்க முழுக்க உலகை ஆண்டு கொண்டிருக்கிற கார்பரேட் கம்பெனிகளின் கையில்தான் உள்ளது. அதைத்தான் ஹீலர் பாஸ்கர் ஐயாவும் தனது "உலக அரசியல்" என்ற தனது உரையில் விளக்குகிறார்.

இவர்களை எதிர்ப்பவர்களை ஏதாவது ஒரு வகையில் அவர்களை கிரிமினல்கள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், தவறான நடத்தை உள்ளவர்கள் என்று முத்திரை குத்தி உலகை நம்ப வைப்பார்கள்.

இதோ இன்னொரு ஆதாரம் : பிஹாரின் எம்.பி பப்பு யாதவ் கிரிமினல் குற்றம்  சாட்டப்பட்டவர். அவரின் பேட்டியை படியுங்கள். இது தி இந்து பத்திரிகையில் 11.12.2014 அன்று வெளியாகியுள்ளது.

பிஹாரில், கிரிமினல் அரசியல்வாதிகள் என குறிப்பிடப்படுபவர்களில் ராஜீவ் ரஞ்சன் யாதவ் எனப்படும் பப்பு யாதவுக்கு முதன்மையான இடமுண்டு. சுயேச்சை மற்றும் வெவ்வேறு கட்சிகள் சார்பில் நான்கு முறை எம்.பி.யாக இருந்தவர். தற்போது ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் மதேபுரா தொகுதி எம்.பி.யாக உள்ளார்.
‘பிஹாரில் மருத்துவர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகளை எழுதிக் கொடுத்தும், தேவைக்கு அதிக மாக மருந்துகளை எழுதிக் கொடுத்தும் மக்களிடமிருந்து கொள்ளையடிக் கின்றனர்’ எனக் குற்றம்சாட்டும் இவர், தனது தொகுதியில் மருத்துவர்கள் குறைந்தபட்ச கட்டணம்தான் வசூலிக்க வேண்டும் என ‘மிரட்டி’ வைத்தி ருக்கிறார்.
மருத்துவர்கள் ’பணத்துக்காக உயிர்களை கொல்பவர்கள்’, ‘மனித சதைகளை உண்ணும் பேய்கள்’ என கடுமையாக விமர்சிக்கும் பப்பு மீது இந்திய மருத்துவர் சங்கம், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம் புகார் அளித்துள்ளது.
இந்நிலையில், ‘தி இந்து’ சார்பில் அவரிடம் பேசியதிலிருந்து

திடீரென மருத்துவர்களுக்கு எதிரான போராட்டம் ஏன்?
1990-ல் பிஹார் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து மருத்து வர்கள் அதிகபட்ச கட்டணத்தைக் குறைத்துக் கொள்ள வலியுறுத்தி வருகிறேன்.
1994-ல் ஒருமுறை மருத்துவர்களுடன் எனக்கு நேரடி மோதல் ஏற்பட்டது. அப்போது மருத்துவர்கள் அதிக மருந்துகள், தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகளுக்கு பரிந்துரைப்பதை எனது தொகுதியில் குறைத்தனர். எனது சொந்தக் காரணங்களினால் ஏற்பட்ட அரசியல் இடைவெளியில் (அப்போது கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருந்தார்) மருத்துவர்கள் மீண்டும் அதிக கட்டணம் வசூலிக்கத் தொடங்கினர். 

நீங்கள் அரசிடம் வைக்கும் கோரிக்கை என்ன?
நம் நாட்டில் 45 சதவிகித மருத்துவர்கள் தவறான முறையில் செயல்பட்டு வருகிறார்கள்.
நர்சிங் ஹோம்களுக்கான சட்டத்தை இன்று வரை அமல்படுத்த முடியவில்லை. மருத்துவர்கள் செய்யும் முறைகேடுகள் பலவும் ஊடகங்களில் ஆதாரங்களுடன் அடிக்கடி வெளி யாகியும் அரசால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மருத்துவர்களில் பலரும் வரம்புமீறி ஆலோசனைக் கட்டணம் வாங்குகின்றனர்.
மருத்துவர்களை கண்காணிக்க அரசு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் குணப் படுத்த முடியாத ஒரு வியாதி தனியார் மருத்துவமனையில் குணப்படுத்தப்படுவது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். 

கிரிமினல் அரசியல்வாதிகளில் ஒருவர் எனக் கருதப்படும் நீங்கள் சட்டவிரோதமாக மருத்துவர்களை மிரட்டுவது சரியா?
(உடன் கோபமானவர் அதை கட்டுப்படுத்த சில நிமிடங்கள் மௌனமானார்) நாட்டை சூறையாடு பவர்களை தட்டிக் கேட்டு, ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்தால் கிரிமினல் என்கிறார்கள்.
மருத்துவர்கள் எவ்வளவு முறை கேடாக சம்பாதிக்கிறார்களோ அவ்வளவு பணத்தை எனது சிறுவயது முதல் மக்களுக்கு உதவியாக அளிக்கிறேன். பிஹார் அரசியல்வாதிகள் மக்கள் பணத்தை எவ்வளவு கொள்ளை அடிக்கிறார்களோ அந்த அளவுக்கு மக்களுக்கு தனி ஒருவனாக அள்ளித் தரும் நான் கிரிமினலா.
மருத்துவம் என்ற பெயரில் பாலியல் குற்றங்கள் செய்யும் மருத்துவர்கள் கிரிமினலா அல்லது மக்களுக்காக தொடர்ந்து தடியடிகள் பெறும் நான் கிரிமினலா? 

நீங்கள் சார்ந்துள்ள ராஷ்ட்ரீரிய ஜனதா தளம் உங்களுக்கு ஆதரவு அளிக்கிறதா?
இந்த விஷயத்தில் கட்சி எனக்கு ஆதரவளிப்பதில்லை என்றாலும், லாலுவின் தார்மீக ஒத்துழைப்பு எனக்கு கிடைக்கிறது. ஒரு பாமர மனிதனுக்கான மகிழ்ச்சி மற்றும் சுயமரியாதைக்கான போராட்டத்தை யார் சொன்னாலும் கைவிட மாட்டேன். 

உங்கள் கோரிக்கைக்கு மற்ற அரசியல் கட்சிகளின் ஆதரவு உள்ளதா?
பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும் பணக் காரர்களின் தரகர்கள். ஊழலை எதிர்த்து போராடுவதாகக் கூறும் ஆம் ஆத்மி கட்சியினரும் மருத்துவர்கள் பிரச்சினையில் அமைதி காக்கின்றனர்.
இந்த பிரச்சினையில் பிஹாரை சரி செய்து விட்டு, வேற்று மாநிலங் களுக்கும் போராட வருவேன். இந்தப் பிரச்சினைக்காக தமிழகத்தின் அமைப்புகள் என்னை குரல் கொடுக்க அழைத்தால் அங்கும் வந்து போராடத் தயாராக இருக்கிறேன். 

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ்

No comments:

Post a Comment